×

பிரபல மலையாள நடிகை ஆன் அகஸ்டின் விவாகரத்து? : நீதிமன்றத்தில் கணவர் வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்தவர் அகஸ்டின். அவரது மகள் ஆன் அகஸ்டின். ‘எல்சம்மா என்ற ஆண்குட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘அர்ஜுனன் சாட்சி’, ‘3 கிங்ஸ்’, ‘ஆர்டினரி’, ‘வாத்தியார்’, ‘டா தடியா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அவரது நடிப்பில் ‘சோலோ’ என்ற மலையாள படம் தமிழிலும் வெளியானது.நடிகை ஆன் அகஸ்டினுக்கும், மலையாள சினிமா கேமராமேன் ஜோமோன் டி.ஜானுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2 பேரும் கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே ஜோமோன் டி.ஜான் விவாகரத்து கோரி ஆலப்புழா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

Tags : Ann Augustine ,Malayalam ,court , அகஸ்டின்.
× RELATED பிரபல மலையாள இயக்குநரான சங்கீத் சிவன்...